கல்லும் முள்ளும் நிறைந்த உன் வாழ்க்கை பாதையில்
உன் மேல் அன்புகொண்ட
உற்ற தோழியாக நானிருக்க
உன் நெஞ்சில் வலி எதற்கு
கண்ணில் நீர் எதற்கு
விழியிலே துணிவிருக்க - நீயும்
விந்தை உலகில் உன் சாதனை நிலை நாடிடு
விடியலை நோக்கி பயணம் செய்
உன் வெற்றிக்கு உன்னோடு என்றும்
உற்ற தோழியாய் நான்
வாழும் வழிகள் பல இருக்கு
வாழ்ந்து காட்டு உலகிற்கு
நம்பிக்கை என்னும் தனம்பிகையோடு
முயற்சி செய்
நாளைய வெற்றி உன்கையில்
நீ உன் வாழ்வில் வெற்றி பெற













