Friday, November 11, 2011

ஒரு நொடியாவது உன் மழலையோடு பேசி பார்த்திருப்பாயா ?





பருவ வயது பசியால் 


பத்து மாதம் சுமந்ததை
 
பாசமும் இல்லாமலும் 


பஞ்சணையில் தவழ விடாமல்

 
பற்றைக்குள் எறியும் போது 


கதறவில்லையா உன் கருவறை? 





தன் பிஞ்சுக்கரன்களால்


மாதாவின் வதனத்தை

வருடி அணைத்து தன்


மல்லிகை இதழ்களால்


முத்தமிடும் மழலையை


பார்க்கும் போது


கருகவில்லையா உன் கன்னங்கள்? 





அன்னையின் மார்பு சூட்டில்

தயத்துடிப்பின் தாலாட்டோடு 

உறங்கும் மழலை 


உன் கண்முன்னே எதிர்படும் போது 


ஒரு நிமிடமாவது உன் 


சுவாசப்பை சுருங்கி


விரிய மறுக்கவில்லையா??





மழலையோடு கூடிய மடியுடன்


தாய் ஒருத்தியை காணும்போது


நீ-வெறுமையான உன் மடியை 

வெறித்து பார்க்கவில்லையா ?



எதுவும் புரியதபோதும் 


எல்லாம் புரிந்ததுபோல் 


புரியாத மொழி ஒன்றில்


புதிராய் பேசி மகிழும்


தாய் சேய் மொழிகளை 


கேட்டபோது உன் 


செவிப்பறைகள் செயலிலக்கவில்லையா?





நடை பயிலும் மழலையோடு 


மீண்டும் நடை பயிலும்


அன்னையரை காணும் போது 


நகரமறுத்து உன் கால்கள்


ஊனமாவதை உணரவில்லையா ?


No comments:

Post a Comment