ஞாபகம் ஒரு வியாதி , மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள் . அனால் நம் குழந்தை படித்ததை எல்லாம் மறக்கும் பொது மறதி ஒரு சாபம் போல நமக்கு தோன்றும்.
ஞாபகம் குறித்து சில தகவல்கள்
நாம் பார்க்கும் ,கேட்கும், உணரும் ,சுவைக்கும் முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும். இது முதலில் குறைந்த நேரமே மனதில் இறுக்கும்(சென்சரி மெமரி ) உடனே மறந்து விடும் .
இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தையும் செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது சோர்ட் டெர்ம் மெமரி ஆக பதிவாகும். இதுவும் சில மணிதுளிக்களுக்கு மட்டும் இருக்கும்.
சோர்ட் டெர்ம் மெமரியை திரும்ப செயும் பொது அது நாள் பட்டஞாபகசக்தியாக மாறும்.
எனவே , ஞாபக சக்திக்கு மிகவும் முக்கியமான இரண்டு : ஆர்வம் மற்றும் கவனம், திரும்ப திரும்ப செய்தல்.
மேலும் நாள் பட்ட ஞாபகம் கூட மறக்க வாய்ப்புள்ளது . இதுவும் நல்லது தான். சில சமயம் வாழ் நாள் முழுவதும் நினைவில் இருக்கும் .
நாள் பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம் explict மற்றும் implict .
explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்.
implicit என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்.
இனி நினைவு திறனை அதிகரிக்கும் விழிகள்
- எதையும் தாய் மொழியில் சிந்திக்க வேண்டும். நீங்கள் படிப்பது தமிழோ ஆங்கிலமோ பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னமோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்.
- புரியாமல் எதையும் படிக்க கூடாது ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை . முழு கவனம் அவசியம்.
- Mnemonics வைத்து படிப்பது ஒரு கலை அதை குழந்தைக்கு கற்று கொடுங்கள்
- Eg:news- north,east,west,south
- படித்தவுடன் எழுதிபார்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் 'Home work 'என்ற பெயரில் கடமைக்கு செய்தல் பயனில்லை .
- படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும் பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்க சொல்ல வேண்டும்
- நல்ல உறக்கம் அவசியம். குறைந்தது 8 மணி நேரதூகம் நிச்சயம் அவசியம்.
- இரவில் விரைவில் தூங்கி அதிகாலை படிக்கும்படி சொல்ல வேண்டும்
- தூங்க போகுமுன் அன்று படித்த அனைத்தையும் ஒருமுறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி சேயும் பொது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூளைகள் விழிப்புடன் இருந்து தகவல்களை சோர்ட் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும் இது மிக முக்கியமான பயிற்சி ஆகும்.
- மாவு சத்துள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும், எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்து கொள்வது நல்லது
No comments:
Post a Comment