இனிய மொழிகளால் பேசியும்
இதமான உன் பரிசத்தாலும்
இமைகளை விழித்திருக்கையிலேயே
இதயத்தை திருடியபோது
இளைய கன்னி இவள்
இன்பமாய் அனுமதித்தாள்
உன் இதயத்தோடு இணைவதற்கு
இடை நடுவே நீயோ
இரக்கமே இல்லாமல்
இடறி விட்டு சென்று-நீ
இன்பமாய் இருந்தாய் - நானோ
இளவு காத்த கிளி போல் ஆனேன்
என் இதயத்தில் கத்தி வைக்க
எப்படி முடிந்தது உன்னால்
என்று இன்னமும் என்னால்
இனம் காணமுடியவில்லை
கண்ணாளனே!
காதலித்த காலங்களில்
காதலனே நீ என்னிடம்
களவாடிய இதயத்தை
திருப்பி கொடுத்து என்னை
தவணை முறையில்
ஊனமாக்கி உயிர் விடவிடாமல்
நீயே உன் கையால்
என்னை தீக்குள் இட்டு
கருணை மனுக் கொலை செய்து
எனக்கு நின்மதியான தூக்கத்தை
நிரந்தரமாய் கொடுத்ததுக்காய்
நான் அழவில்லை
No comments:
Post a Comment