Wednesday, January 18, 2012
தேடுகிறேன்
மழைக்காக நான்
மரத்தடியில் ஒதுங்க
மரத்தடி இருந்த நீயோ
மங்கை இவள்
மனதோடு ஒதுங்கினாய்
விழிவழியே என்னை
வழிப்பறி செய்தாய்
வலிகளை உணரமுன்
வரம் என்று நினைத்தேன்
இதுவரை நான்
தொல்லையாய் நினைத்தேன்
என் தோள்களில் தொங்கிய
துப்பட்டா
தென்றல் உதவியோடு
தெய்வாதினமாய் உன்னை
தழுவியதால்
உறக்கம் கலைக்கும்
உன் நினைவுகளை
உதற மனமின்றி
உடுத்தி கொள்கிறேன்
என் இரவு நேர போர்வையாய்
நீயோ
உன் விழி ஈர்ப்பின்
கவர்ச்சியால் என்னை
காந்தமாய் கவர்ந்ததை
கவனிக்காமல் சென்றாய்
நானோ
சோ என பொழியும்
மழைத்துழியின் இடைவெளியில்
சோராமல் தேடுகிறேன்
மனதை திருடி விட்டு
மாயமாய் மறைந்த உன்னை...
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment