ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு
பெண் இருந்தால் என்பது போய் இன்றைய
பெண்கள் நேரடியாகவே தங்கள் திறமைகளை
வெளிப்படுத்துகிறார்கள். முதுகுக்கு பின்னால்
இருந்து செயல்பட்டவர்கள் இன்று முன்வந்து
செயல்படுகிறார்கள். முந்தைய காலங்களில்
படலை தாண்டாமல் அடுப்பங்கரையோடு
வாழ்ந்துமுடித்தார்கள்.
ஆனால் இன்று நாட்டின் அனைத்து துறைகளிலும்
அரசியல்,பொருளாதாரம், சமுக, தொழில்நுட்ப்பம்,
விஞ்ஞானம் என சகல துறைகளிலும்
ஆண்களுக்கு இணையாக பங்களிப்பு செய்கிறாள்.
இன்றைய பெண்கள் போட்டி போட்டு கல்வி கற்று
உயர்பதவிகளை வகித்துஅதிகமாக
சம்பாதிபதையே விரும்புகிறார்கள்.
குடும்பொருளாதாரத்தில் சம பங்கு வகிக்கிறார்கள்.
இப்போதைய ஆண்களும் தங்களது மனைவி
சம்பாதிக்கிறவளாக இருக்க வேணும் என்பதையே
எதிர்பார்க்கிறார்கள் .நாளாந்த செலவுகள் சமாளிக்க
ஒருவரின் உழைப்ப
போதாது உள்ளது.
முற்காலத்தில் பெண்கள் கிணற்று தவளை போல்
ஒருகுறிப்பிட்ட எல்லைக்குள் வாழ்ந்தவர்கள்.
அதாவது தமது குடும்பம் மற்றும் உறவினரோடு
மட்டுமே பழகியவர்கள். இப்போது எல்லாம் வெளி
உலகத்தோடு பழகி பல்வேறு விடயங்களில்
முன்மாதிரியாக செயற்படுகிறார்கள்.இதன்னால்
பல்வேறுபட்ட அனுபவங்களை பெறுகிறார்கள்.
இதனால் தங்களது ஆளுமையை விருத்தி
செய்கிறார்கள்.அலுவலகங்களுக்கு போகும்
பெண்கள் பல்வேருபட்டவர்களோடு பழகுதல்,
குழுவாக செயற்படல், பொறுப்புக்களை ஏற்றல்,
மற்றவர்களை அனுசரித்து போதல்,
தீர்மானங்களை எடுத்தல் என பலவேறு
செயற்பாடுகளை செய்வதனால் அவர்களால்
குடும்பத்தையும் சரியாக கவனிக்கவும்,
வருமானங்களை திட்டமிட்டு செலவு செய்யவும்,
குடும்ப அங்கத்தவர்களோடு அனுசரித்து பழகவும்.
விட்டுகொடுத்து வாழவும் முடிகிறது. குடும்பத்தில்
ஏற்படும் முரண்பாடுகளை சமாளித்து சரியான
தீர்மானங்களை எடுத்து வாழ்கிறாள்.வேலைக்கு
போகும் பெண் அதிக ஆளுமை உடையவளாகவும்,
எதையும் எதிர்க்கும் சக்தி உடையவளாகவும்,
தலைமைத்துவ பண்புகள் நிறைந்தவளாகவும்
காணப்படுகிறாள்.
தன்னை வெளிக்கொணராமல்
பின்னூட்ட சக்தியாக இருந்தவள் இன்று
பெண்கள் பரந்து விரிந்த நீலக்கடலின்
வழிதெரியாமல் பயணிக்கும் கப்பல்களுக்கு
திசைகாட்டியாக விளங்கும் கலங்கரை விளக்கை
போல் தனது குடும்பம்,சமுகம் மற்றும் நாடு என
எல்லா இடங்களிலும் களங்கம் இல்லாமல்
ஒளிகிறாள்.
No comments:
Post a Comment