Tuesday, October 25, 2011

தீபாவளி






தீபாவளி இந்து மக்களின் பண்டிகைகளில் சிறப்பான ஒன்றாகக் கொண்டாடப்படுகின்றதுதீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை


. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும்


 பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் 


பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் 


செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர்


 மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம்,


 பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது 


ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை 


எரித்துவிட வேண்டும்.



தீபாவளி ஐப்பசி அமாவாசை அன்று கொண்டா டப்படும். இந்துக்கள் மட்டுமன்றி இப்பண்டிகையை சீக்கியர்களும் சமணர்களும் வெவ்வேறு காரணங்களுக்காகக் கொண்டாடுகின்றனர். தீபாவளி தினத்தன்று இந்துக்கள் வீட்டில் எண்ணெய் தேய்த்து குளித்தல், புத்தாடை அணிதல், கோயிலுக்குச் செல்லுதல், இனிப்புப்பண்டங்கள் செய்து அயலவர்களுக்கு கொடுத்தல், வெடி வெடித்து, மத்தாப்பு சுற்றுதல், இறந்தவர்களுக்கு உணவு படைத்தல் என பல விடயங்கள் நிகழ்த்தப்படு கின்றன. இவ்வாறு பல மகிழ்ச்சிகரமான விடயங்களை உள்ளடக்கிய தீபாவளி ஏன் கொண்டாடப்படுகின்றது? பல காரணங்கள் விடைகளாகக் கூறப்படுகின்றன.
இராமாயண இதிகாசத்தில் இராமர் இராவணைனை அழித்துத் தனது வனவாசத்தையும் முடித்து மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி நகரை நோக்கி திரும்பிய அந்த இனிய நாளை, மக்கள் மகிழ்ச்சி களிப்போடும் ஆர்ப்பாட்டங்களோடும் கொண்டாடிய தருணத்தை நினைவுபடுத்தும் முகமாக கொண்டாடுவதாக கூறப்படுகின்றது. அந்த இனிய நாளில் மக்கள் விளக்குகள் ஏற்றி வீதியை ஒளிமய மாக்கியதாகவும் கூறப்படுகின்றது.
இதேபோல் இன்னொரு புராண கதையில் கிருஸ்ணர் நரகாசுரன் என்ற அசுரனை அவனது கொடுமைகள், இம்சைகள் தாங்காது கொன்று அழிக்கின்றான்.
அத்தருணத்தில் நரகாசுரன் ஒரு வரம் கேட்கின்றான். பல கொடுமைகள் புரிந்த தீயவன் நான் இறந்துபோகும் இந்நாளை மக்கள் என்றென்றும் மகிழ்ச்சிகரமாக கொண்டாடவேண்டும் என்பதே அவ் வரம். தீயவன் ஒருவனின் அழிவில் மகிழ்வுற்ற மக்கள் அன்று கொண்டாடிய கொண்டாட்டமே இன்றும் தீபாவளியாக கொண்டாடப்படுவதாகக் கருதப்படுகின்றது.


இதற்கு ஸ்கந்த புராணத்திலும் ஒரு நிகழ்வு கூறப்படுகின்றது. சிவனோடு ஒரு சந்தர்ப்பத்தில் கோபம் கொண்ட சக்தி, சிவனின் அருளை உணர்ந்து 21 நாள் கேதாரகெளரி விரதம் இருந்து சிவனில் ஒன்றி ணைகிறார்.
இவ்வாறான விரதம் முடிவுற்ற அத்தி னத்தில் சிவன் தன்னில் ஒரு பாதி சக்தி என்பதை ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவமெடுக்கின்றார். இவ்வாறு ஆணில் பெண் சரிபாதியாக இணையும் நன் நாளினை நினைவுபடுத்துவதாக தீபாவளி அமைகின்றதாக ஒரு சாரர் கூற மற்றும் ஒரு சாரார் தீபாவளிக்கு ஸ்கந்த புராணத்திலேயே இன்னும் ஒரு காரணத்தையும் கூறுகின்றனர்.
முருகன் சூரனின் அட்டூழியங்களை இவ்வாறு ஒழிக்க சூரனையே அழிக்கின்றார். சூரன் அழியும் அவ்விடத்தில் சேவலும் மயிலும் தோற்றுகின்றன.
அச்சந்தர்ப்பத்தில் சூரனின் இரத்தம் பூமி எங்கும் பரவுகின்றது. இதனால் உயிரினங்களுக்கு தோஷம் ஏற்படும் அதேவேளை, முருகனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகின்றது. இவ்வாறு முருகனுக்கு ஏற்படும் தோஷம் மக்கள் எல்லோரையும் சார்ந்ததாக கருதியே எண்ணெய் தேய்த்து குளிக்கும் மரபு தோன்றியதாக ஓர் ஐதீகம்.
இதே சந்தர்ப்பத்தை மையப்படுத்தி சூரன் இறந்த அந்தச் சந்தர்ப்பத்தில் தேவலோகம் இருளடைந்ததாகவும் அவ் இருளை போக்கவே வாண வேடிக்கைகளும் விளக்குகளும் ஏற்றப்பட்டதாக ஒரு கதை உண்டு.
இந்துக்கள் இவ்வாறான பல காரணங்களைக் கூறும் அதேவேளை சீக்கியர்கள் 1577 தங்கக் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கியதையொட்டி கொண்டாடிய மகிழ்ச்சிகரமான கொண்டாட்டம் இத் தீபாவளி என்கின்றனர். சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த புனித தினத்தை நினைவுபடுத்தும் நாளே தீபாவளி என்கின்றனர்.
எது எவ்வாறு எனினும் பலர் பல புராண கதைகளை சொன்னாலும் இறுதியில் எமக்கு விளங்கும் ஒரே கருத்து தீயவன் ஒருவனின் அழிவைக் கொண்டாடும் நாளே தீபாவளி. மனிதப் படைப்பில் எல்லோரும் எல்லா நல்ல பண்புகளை கொண்டிருக்காவிடினும் தீய எண்ணங்களையும், கொள்கைகளையும் சுட்டெரித்து நல்ல விடயங்களால் மனதிற்கு ஒளி ஏற்றி கொண்டாடி மகிழ்ந்திடுவோம்.

No comments:

Post a Comment