உறவுகள் மேம்பட
- நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.( loose Talks)
- எந்த விடயத்தையும் பிரச்சினையையும் நாசுக்காக கையாளுங்கள்.(Diplomacy) விட்டு கொடுங்கள் (Compromise)
- உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.(Carrying Talks)
- அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் (Over Expectation)
- எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டு இருக்காதீர்க்ள்
- கேள்விப்படுகிற எல்லா விடயங்களையும் நம்பிவிடாதீர்கள்.
- உங்கள் கருத்துகளில் உடும்புப்பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.(Flexibility)
- மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப்புரிந்து கொள்ளாதீர்கள்(Misunderstanding)
- மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள் (Courtesy)
- புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச்சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாததுபோல் நடந்து கொள்ளாதீர்கள்.
- பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள்.
No comments:
Post a Comment