முதுகு வலி என்பது உடலின் பின்பக்கத்தில் உணரப்படும் வலியாகும். இது பொதுவாக முதுகெலும்பிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது.இந்த வலி அடிக்கடி கழுத்துவலி, மேல் முதுகு வலி, கீழ்முதுகு வலி அல்லது
வாலெலும்பு வலி என்று பிரிக்கப்படலாம். இது திடீரென்றும் தோன்றலாம் அல்லது நாட்பட்டவலியாகவும் இருக்கலாம்; இது நிலையானதாக இருக்கலாம் அல்லது வந்து போவதாக இருக்கலாம், ஒரே இடத்திலிருக்கலாம் அல்லது மற்ற பாகங்களுக்கு பரவுவதாக இருக்கலாம்.
நாம் தினசரி காரியங்களில் முதுகு வலிக்கு ஆகாத பல விஷயங்களை அறியாமல்செய்கிறோம். உதாரணமாக கூன் முதுகிட்டு உட்காருவது நடக்கும் போது கூன்போடுவதது பொருட்களை தூக்கும்போது முதுகை வளைப்பது போன்றவற்றைச் செய்கிறோம்.
உட்கார்ந்த வேலை பார்ப்பவர்களுக்கு முதுகுவலி கட்டாயம் வரும் ஏனெனில் நாம் முதுகை சற்றே வளைக்காமல் உட்கார முயற்சி செய்வதில்லை . உங்கள் தண்டுவடத்திற்கு முட்டுக் கொடுக்கும் நாற்காலிகள் தேவை அதேபோல் தூக்கம் அவசியம் நாளொன்றுக்கு 7 மணி நேரம் தூங்குவது கட்டாயம்.
வலியைக் குறைக்க உடற்பயிற்சிகள் ஒரு திறமிக்க அணுகுமுறையாக இருக்கலாம், ஆனால் அது அங்கீகரிக்கப்பட்ட உடல்நல நிபுணரின் கண்காணிப்பின் கீழ் செய்யப்பட வேண்டும்.
- எப்பொழுதும் சுறுசுறுப்போடு இருப்பது, பொதுவான உடற்பயிற்சிகள் செய்வது. (உதாரணமாக) நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது.
- தாழ்ந்த நாற்காலியில் அதிக நேரம் அமர வேண்டாம்.
- உறங்கும் போது கடினமான மெத்தையை உபயோகிக்கவும் (அல்லது) தரையில் உறங்கவும்.
- நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது இருக்கையை உங்கள் உயரத்திற்கு ஏற்றவாறு
மாற்றிக்கொள்ளவும்.
. - கணிணியில் அதிக நேரம் வேலை பார்பவர்கள் தங்கள் இருக்கையை சரி செய்து, தனது முழுமுதுகும் இருக்கையில் (நிமிர்ந்தவாறு) இருக்கும்படி செய்யவும்.
- அதிக நேரம் முதுகு திரும்பியவாறு வேலை செய்ய வேண்டாம்.
.
- அதிக நேரம் நின்று கொண்டே பயணிக்க வேண்டாம்.
- முதுகு வலி எடுத்தால், நீண்ட நேரம் அமருவதை தவிர்க்கவும். 30 நிமிடங்களுக்கு ஒரு முறை எழுந்து சில பொதுவான பயிற்சிகள் செய்யவும்.
கீழ்கண்ட ஏதேனும் அறிகுறிகள் இருப்பின்
உடனடியாக (பிசியோதெரபிஸ்டை) அணுகவும்.
2) வலி கால்களுக்கு பரவுதல், கால்களுக்கு பரவுதல், கால்களில் உணர்ச்சியின்மை (அல்லது) எரிச்சல்,
4) நீண்ட நேரம், நின்றால், அமர்ந்தால் (அல்லது) நெடுந்தூரம் பயனித்தல் முதுகுவலி வருவது.
முதுகு வலி துவக்க நிலையில், எக்ஸ்-ரே பரிசோதனை எடுக்கப்படும். என்ன பிரச்னை உள்ளதென்பதை எக்ஸ்-ரே மூலம் கண்டறியலாம். சில நேரங்களில் ரத்தப் பரிசோதனையும் செய்ய வேண்டி வரும். பெரும்பாலான முதுகுவலிகள், சில நாட்களிலேயே மறைந்து விடும். எனவே, வலி ஏற்பட்ட உடனேயே மருத்துவரிடம் செல்வதை விட, சில நாட்கள் பொறுத்திருந்து வலி நீடித்தால் மருத்துவரிடம் காண்பிக்கலாம். நீங்கள் அமரும் அல்லது நிற்கும் நிலை, காலணி, அமரும் நாற்காலிஅல்லது சோபா ஆகியவற்றில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் ஆராய வேண்டும்.உன்னிப்பாக கவனித்து செயல்பட்டால், பெரும்பாலான முதுகு வலியை தவிர்த்து விடலாம்.
போதுமான அளவு ஓய்வில் இருத்தல், வலி நிவாரணி எடுத்து கொள்ளுதல், வலி குறைக்கும்
பட்டைகள் கட்டிக் கொள்ளுதல், மென்மையான படுக்கையில் படுக்காமல் தரையில் படுத்தல், தசை சீர்படுத்தும் மாத்திரைகள் உட்கொள்ளுதல் ஆகியவை மேற்கொண்டால், வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
உடல் எடையை குறைப்பதிலும் முனைப்பு காட்ட வேண்டும். உடல் எடையுடன், “பி.எம்.ஐ.,’ அளவு சரியாக ஒத்து போகிறதா என்பதையும் அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.
நெடுநேரம் நின்றபடி பணி செய்ய வேண்டி இருந்தால், கால்களை மாற்றி மாற்றி தரையில் ஊன்றி, பணி செய்தால் அதிக வலி ஏற்படாது. குத்துக் காலணி அணிவதை முற்றிலும் தவிர்க்கவும்.
உங்கள் கால்களுக்கு ஏற்ற வகையிலும், நடக்கும் போது உடல் எடை, கால் முழுவதும் சீராக பரவும் வகையிலும் செருப்பு அணிய வேண்டும்.
கைப் பையை ஒரே தோளில் தொடர்ந்து மாட்டிக்கொள்ளாமல், அடிக்கடி மாற்றி மாட்டிக் கொள்ள வேண்டும்.
இரு கைகளையும் பயன்படுத்தி, பாத்திரங்கள் தூக்குவது, பெருக்குவது, தரை துடைப்பது ஆகியவை முதலில் கடினமானவையாகதோன்றும். இந்த வேலைகளை பழக்கி கொண்டால், முதுகுத் தண்டு வடம் நல்ல முறையில் இயங்கஇவை உதவும்.
உடலின் இரு பகுதிகளுக்கும் சமமாக வேலைகள் இருப்பது அவசியம்.கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த பிறகும் உடற்பயிற்சி செய்தால், முதுகுக்கு அதிக பிரச்னை ஏற்படாது.
உடலும், முதுகுத் தண்டு வடமும் ஏற்கனவே இருந்த வடிவமைப்புக்கு திரும்பும்.
யோகா, ஏரோபிக்ஸ், போர் பயிற்சிகள் தண்டு வடத்திற்கு சிறந்த பயிற்சி அளிக்கின்றன. புத்தகங்கள், ஆசிரியர்கள், “டிவி’ மற்றும் வெப்சைட்டுகள் மூலம் இந்த பயிற்சிகள் குறித்து விளக்கம் பெறலாம்.
பத்து வயது முதல் தினமும் சில நிமிடங்களாவது முதுகுக்கு நல்ல பயிற்சி கொடுத்தால் திடமான, நிமிர்ந்த தோற்றத்தை பெறலாம்.
No comments:
Post a Comment