கண்ணா கண்ணா காதல் கண்ணையா
நீ என்னை விட்டு போனதென்னையா
நெஞ்சுக்குள்ள காயம் ஆச்சு யா
என்பட்டம் பூச்சி சாயம் போச்சு யா
அட பெண்ணோட காதல் கைரேகை போல
ஆணோட காதல் கைக்குட்டை போல
கனவுக்குள அவனை வச்சனே
என்கண்ணை ரெண்டை திருடி போனானே
புல்லாங்குழலை கையில் தந்தானே
என்மூச்சு காத்தை வாங்கி போனானே
ஆம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும் இப்ப கடைசியில் நின்னன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால் மனம் பித்தமாகும் ஆணால்
அவன் கைய விட்டுதான் போயாச்சு
கண்ணு ரெண்டுமே பொய் ஆச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாதை கல்லு முள்ளுடி
அத கடந்து போன ஆளே இல்லடி
காதல் ஒரு போத மாத்திரை
அத போட்டுகிட்டா மூங்கில் யாத்திரை
ஓட்ட போட்ட மூங்கில் அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்னை பத்தி பாடும்
வந்துபோனதாரு ஒரு நந்தவன தேரு
நம்பி நொந்து போனேன் பாரு அவன் பூவு இல்ல நாரு
என்னை திடம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
மனம் தாங்காதே தாங்காதே
வானவில்லின் கோலம் நீயடா
என் வானம் தாண்டிபோனது எங்கே யா
காதல் இல்ல ஊரு எங்கடி
என்னை கண்ணை கட்டி கூட்டி போங்கடி