Monday, January 23, 2012

இதய திருடன்





இனிய மொழிகளால் பேசியும் 

இதமான உன் பரிசத்தாலும் 

இமைகளை விழித்திருக்கையிலேயே 



இதயத்தை திருடியபோது 


இளைய கன்னி இவள் 

இன்பமாய் அனுமதித்தாள்


உன் இதயத்தோடு இணைவதற்கு





இடை நடுவே நீயோ 

இரக்கமே இல்லாமல் 

இடறி விட்டு சென்று-நீ 

இன்பமாய் இருந்தாய் - நானோ

இளவு காத்த கிளி போல் ஆனேன் 








என் இதயத்தில் கத்தி வைக்க

எப்படி முடிந்தது உன்னால்

என்று இன்னமும் என்னால்

இனம் காணமுடியவில்லை 

கண்ணாளனே!
   







காதலித்த காலங்களில்

காதலனே நீ என்னிடம் 

களவாடிய இதயத்தை

திருப்பி கொடுத்து என்னை 

தவணை முறையில் 

ஊனமாக்கி உயிர் விடவிடாமல்

நீயே உன் கையால் 

என்னை தீக்குள் இட்டு


கருணை மனுக் கொலை செய்து 

எனக்கு நின்மதியான தூக்கத்தை 

நிரந்தரமாய் கொடுத்ததுக்காய்  



நான் அழவில்லை 

ஆனந்தமடைந்தேன்.











Sunday, January 22, 2012

மேன்மையடையும் பெண்ணினம்











ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு 


பெண் இருந்தால் என்பது போய் இன்றைய 


பெண்கள் நேரடியாகவே தங்கள் திறமைகளை 


வெளிப்படுத்துகிறார்கள். முதுகுக்கு பின்னால் 


இருந்து செயல்பட்டவர்கள் இன்று முன்வந்து   


செயல்படுகிறார்கள். முந்தைய காலங்களில்   


படலை தாண்டாமல் அடுப்பங்கரையோடு 


வாழ்ந்துமுடித்தார்கள். 




ஆனால் இன்று நாட்டின் அனைத்து துறைகளிலும் 


அரசியல்,பொருளாதாரம், சமுக, தொழில்நுட்ப்பம்


விஞ்ஞானம் என சகல துறைகளிலும் 


ஆண்களுக்கு இணையாக பங்களிப்பு செய்கிறாள்.

இன்றைய பெண்கள் போட்டி போட்டு கல்வி கற்று 



உயர்பதவிகளை வகித்துஅதிகமாக 


சம்பாதிபதையே விரும்புகிறார்கள்.  


குடும்பொருளாதாரத்தில் சம பங்கு வகிக்கிறார்கள். 


இப்போதைய ஆண்களும் தங்களது மனைவி 


சம்பாதிக்கிறவளாக இருக்க வேணும் என்பதையே 

எதிர்பார்க்கிறார்கள் .நாளாந்த செலவுகள் சமாளிக்க 

ஒருவரின் உழைப்ப போதாது உள்ளது.



முற்காலத்தில் பெண்கள் கிணற்று தவளை போல் 

ஒருகுறிப்பிட்ட எல்லைக்குள் வாழ்ந்தவர்கள்.

அதாவது தமது குடும்பம் மற்றும் உறவினரோடு 

மட்டுமே பழகியவர்கள். இப்போது எல்லாம் வெளி 

உலகத்தோடு பழகி பல்வேறு விடயங்களில் 

முன்மாதிரியாக செயற்படுகிறார்கள்.இதன்னால் 

பல்வேறுபட்ட அனுபவங்களை பெறுகிறார்கள்.



இதனால் தங்களது ஆளுமையை விருத்தி 

செய்கிறார்கள்.அலுவலகங்களுக்கு போகும் 

பெண்கள் பல்வேருபட்டவர்களோடு பழகுதல், 

குழுவாக செயற்படல், பொறுப்புக்களை ஏற்றல், 

மற்றவர்களை அனுசரித்து போதல், 

தீர்மானங்களை எடுத்தல் என பலவேறு 

செயற்பாடுகளை செய்வதனால் அவர்களால் 

குடும்பத்தையும் சரியாக கவனிக்கவும், 

வருமானங்களை திட்டமிட்டு செலவு செய்யவும், 

குடும்ப அங்கத்தவர்களோடு அனுசரித்து பழகவும். 

விட்டுகொடுத்து வாழவும் முடிகிறது. குடும்பத்தில் 

ஏற்படும் முரண்பாடுகளை சமாளித்து சரியான 

தீர்மானங்களை எடுத்து வாழ்கிறாள்.வேலைக்கு 

போகும் பெண் அதிக ஆளுமை உடையவளாகவும், 

எதையும் எதிர்க்கும் சக்தி உடையவளாகவும், 

தலைமைத்துவ பண்புகள் நிறைந்தவளாகவும் 

காணப்படுகிறாள். 


தன்னை வெளிக்கொணராமல் 

பின்னூட்ட சக்தியாக இருந்தவள் இன்று 

பெண்கள் பரந்து விரிந்த நீலக்கடலின் 

வழிதெரியாமல் பயணிக்கும் கப்பல்களுக்கு 

திசைகாட்டியாக விளங்கும் கலங்கரை விளக்கை 

போல் தனது குடும்பம்,சமுகம் மற்றும் நாடு என 

எல்லா இடங்களிலும் களங்கம் இல்லாமல் 

ஒளிகிறாள்.

Wednesday, January 18, 2012

தேடுகிறேன்





மழைக்காக நான் 

மரத்தடியில் ஒதுங்க 


மரத்தடி இருந்த நீயோ


மங்கை இவள் 


மனதோடு ஒதுங்கினாய் 



விழிவழியே என்னை

 
வழிப்பறி செய்தாய்

 
வலிகளை உணரமுன்

 
வரம் என்று நினைத்தேன் 



இதுவரை நான் 


தொல்லையாய் நினைத்தேன் 


என் தோள்களில் தொங்கிய 


துப்பட்டா 



தென்றல் உதவியோடு 


தெய்வாதினமாய் உன்னை 


தழுவியதால்



உறக்கம் கலைக்கும்


உன் நினைவுகளை


உதற மனமின்றி

 
உடுத்தி கொள்கிறேன் 


என் இரவு நேர போர்வையாய்



நீயோ

 
உன் விழி ஈர்ப்பின்


கவர்ச்சியால் என்னை

 
காந்தமாய் கவர்ந்ததை
 
கவனிக்காமல் சென்றாய்



நானோ 


சோ என பொழியும்

 
மழைத்துழியின் இடைவெளியில்

 
சோராமல் தேடுகிறேன் 


மனதை திருடி விட்டு

 
மாயமாய் மறைந்த உன்னை...